யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து , தற்போது மீள்குடியேறியுள்ள நிலையில் தமது வீடுகளை அமைப்பதற்காக மணலைப் பெற்றுக்கொள்வதற்கு மாந்தை கிழக்கு
மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய
கலாநிதி சி . சிவமோகன் தெரிவித்தார் .
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
மீள்குடியேறியுள்ள மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன .
அவ் வீட்டுத்திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதியானது தற்போதுள்ள
சூழ்நிலையில் வீட்டினை முழுமையாக அமைப்பதற்குப் போதுமானதாக இல்லை . இதனால்
மக்கள் கஷ்டத்துக்கு மத்தியில் வீடுகளை அமைத்து வருகின்றனர் . அத்துடன்
இவ் வீட்டுத் திட்டங்களை குறிப்பிட்ட கால எல்லைக்குள் அமைத்து முடிக்க
வேண்டும் எனவும் மக்களுக்கு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
இது இவ்வாறு இருக்க , வீட்டுத் திட்டத்திற்கான மணலைப் பெற்றுக்
கொள்வதற்கு தமக்கு முன்னர் வழங்கப்பட்டு அனுமதிப் பத்திரம் தற்போது
நிறுத்தப்பட்டுள்ளது எனவும் , இதனால் தமது வீட்டுத் திட்ட நடவடிக்கைகள்
பாதிப்படைந்துள்ளது எனவும் மீள் குடியேறியுள்ள மாந்தை கிழக்கு மக்கள்
தெரிவிக்கின்றனர் .
எனவே , எமது வீட்டுத்திட்ட நடவடிக்கைகளுக்கு மணலைப் பெறுவதற்கான இலவச
மணல் பெறும் அனுமதியை பெற்றுத் தருமாறும் மக்கள் என்னிடம் கோரிக்கை
விடுத்துள்ளனர் . எனவே , மேற்பட்ட அநீதிகளை கட்டுப்படுத்தி மீள்
குடியேறியுள்ள மக்களின் வீட்டு நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக