சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

11 நவம்பர், 2013

இலங்கை வந்த செனல் 4 ஊடகவியலாளர்களுக்கு எதிராக விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம். [படங்கள் இணைப்பு ]


செனல் 4 ஊடகவியலாளர் கலம் மக்ரேவிற்கு இலங்கையில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது .
கலம் மக்ரே , இன்றைய தினம் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தார் . பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் குறித்த செய்தி சேகரிப்பில் ஈடுபடும் நோக்கில் மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் . நோ பயர் ஸோன் , கில்லிங் பீல்ட் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படங்களை மக்ரே வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
 
தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிடாது , படையினர் மீது மட்டும் செனல் 4 ஊடகம் குற்றம் சுமத்தியதாக தெரிவித்து விமான நிலையத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது . பதாகைகளை ஏந்தியும் , கோசங்களை எழுப்பியும் மக்ரேவிற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் . செனல் 4 ஊடகவியலாளரை நாட்டுக்குள் அனுமதித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் , அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை எதிர்ப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர் 
 


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக