தமிழீழ விடுதலை புலிகளின் தொலைக்காட்சி பிரிவில் செய்தியாளராக பணியாற்றிய இசைப்பிரியா
சிங்கள காடையர்களின் வன்மத்துக்கு உள்ளாகி மரணமடைந்தார் அவர் கடைசி நிமிடங்களில் இராணுவத்தினரின் மத்தியில் நாதியற்று நின்ற
காட்சி சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை இராணுவத்தின் அத்துமீறல்களை புலம்
போட்டு காட்டியுள்ளது . இறுதிக் கட்ட போரில் இசைப்பிரியா போன்று
எத்தனையோ பெண்கள் இராணுவத்தின் பிடியில் சிக்குண்டு மடிந்து போயினர் .
அக் காணொளிகளையெல்லாம் வெளியிட நேரிடின் இலங்கை அரசின் ஈவு இரக்கமற்ற
தன்மையை கண்டு சர்வதேசமே கண்ணீர் சிந்த வேண்டிய நிலை வரும் . போரால்
சொந்தமிழந்து , சொத்திழந்து நின்றது போக எம் பெண்கள் மானமும் இழந்து
நிற்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர் . அவற்றையெல்லாம் பறை
சாற்றும் முகமாக வெளிவந்த இசைப்பிரியாவின் காணொளி தீர்வொன்றை பெற்றுத்
தரும் என்ற நம்பிக்கையில் எம்மவர்கள் விடிவுக்காய் காத்துக்கொண்டுள்ளனர் .
பத்து மாதம் சுமந்த தாய் காணக்கூடாத காட்சியொன்றை இசைப்பிரியாவின் தாய்
கண்டுள்ளார் . தன் மகளுக்கு நேர்ந்த கதியை மனதில் உள்ள சோகங்களை சனல் 4
இடம் பகிர்ந்து கொண்டுள்ளார் . காணொளிகள் கீழே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக