இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டுக்கு இந்திய பிரதமர் கட்டாயம்
வந்திருக்கவேண்டும் .ஆனால் , இந்திய பிரதமர் கலந்துகொள்ளாமை
தொடர்பில் எம்மைவிட இந்தியாவே கவலையடைய வேண்டும் . இலங்கை கவலையடைய
வேண்டியதில்லை . என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ
தெரிவித்தார் .
தமிழ்நாடு தமது மக்களை பார்த்துக்கொள்ளவேண்டும் . மாறாக எமது நாட்டு
விடயங்களில் தலையிடுவதை விடுத்து தமது விடயங்களையே தமிழ்நாடு
பார்க்கவேண்டும் என்றும் அவர் கூறினார் .
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது
பொதுநலவாய மாநாட்டின் செய்தி சேகரிப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தின் ஊடக பிரிவுக்கு நேற்று வருகை தந்த
அமைச்சர் பஷில் ராஜபக் ஷ ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்
அளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார் .
இந்த மாநாடு இங்கு நடைபெறுவது குறித்து இலங்கை பெருமையடைகின்றது .
இந்த மாநாட்டின் காரணமாக உலகின் கவனம் இங்கு திரும்பியுள்ளது . 30 வருட
பயங்கரவாதத்துக்கு முகம் கொடுத்த நாடு என்ற வகையிலும் பொருளாதார
பிரச்சினைகளை சந்தித்த நாடு என்ற வகையிலும் எமது நாடு தற்போது
முன்னேறிவருகின்றது . சர்வதேச துறைமுகம் , விமான நிலையம் அதிவேக வீதி என்பன
அமைக்கப்பட்டுள்ளன .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக