காமன்வெல்த் அமைப்பில், 53 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த
அமைப்பின், 22வது மாநாடு, இலங்கையின், கொழும்பு நகரில், கடந்த 3 நாட்களாக
நடந்தது.இலங்கையில், விடுதலை புலிகளுடனான போர் முடிந்த பின்பும், அங்கு
மனித உரிமை மீறல்கள் தொடருவதாக, ஐ.நா., மனித உரிமை அமைப்பு புகார்
தெரிவித்திருந்தது. இதை காரணம் காட்டி, கனடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு
பிரதமர்கள் இந்த மாநாட்டை புறக்கணித்தனர்.”மத்திய அரசு இந்த மாநாட்டில்
கலந்து கொள்ளக்கூடாது’ என, தமிழக சட்டசபையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டதால், பிரதமர் மன்மோகன் சிங், இந்த மாநாட்டில்
பங்கேற்கவில்லை. “பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும், இந்த மாநாட்டில்
பங்கேற்கக்கூடாது’ என, மனித உரிமை ஆர்வலர்கள் வற்புறுத்தினர்.
ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்ற கேமரூன், இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு சென்று, அங்குள்ள தமிழ் மக்களின் நிலையை நேரில் கண்டறிந்தார். அதன் பின், “”மனித உரிமை குறித்து, சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும்,” என, பேசினார்.
ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்ற கேமரூன், இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு சென்று, அங்குள்ள தமிழ் மக்களின் நிலையை நேரில் கண்டறிந்தார். அதன் பின், “”மனித உரிமை குறித்து, சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும்,” என, பேசினார்.
இதுகுறித்து, இலங்கை அதிபர் ராஜபக்சே, நிருபர்களிடம் கூறியதாவது:இலங்கையில், 30 ஆண்டுகளாக சண்டை நடந்தது. இதனால், தமிழர்கள், சிங்களர்கள் மட்டுமல்லாது, முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர். அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. அரசியலமைப்பு படியும், சட்ட விதிமுறைகளின் படியும்தான் செயல்படுகிறோம். இவற்றையெல்லாம் மதிப்பதால் தான், வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தினோம். மக்களின் மனோ நிலையை மாற்ற வேண்டியுள்ளது; வடக்கு பகுதி மக்களை மட்டுமல்ல; தெற்கில் உள்ளவர்களையும் மாற்ற வேண்டியுள்ளது.இலங்கையில் போர் முடிந்த பின், நல்லிணக்க குழுவை அமைத்துள்ளோம். இந்த குழுவில் எம்.பி.,க்கள் உளளனர். தனியொருவனாக என்னால் எதையும் செய்ய இயலாது. நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, காலவரையறை எதையும் செய்ய இயலாது. “மற்ற நாடுகள் தலையிட்டு, ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும்; 4 மாதத்தில் முடிக்க வேண்டும்’ என, நிர்பந்திக்கக்கூடாது; இதில் நியாயமில்லை. பிரிட்டன் பிரதமர் சொல்வது போல, மார்ச் மாத்திற்குள் விசாரணையை நடத்தி முடிக்க முடியாது. எங்களுக்கு கட்டளை பிறப்பிக்காதீர்கள். தயது செய்து, எங்களது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்காதீர்கள்.இவ்வாறு ராஜபக்சே கூறினார்.
இலங்கை மனித உரிமை அமைப்பை வலுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள்
இந்த மாநாட்டில் தீர்மானமாக இயற்றப்பட்டன.ஆஸ்திரேலிய பிரதமர், டோனி அபோட்,
காமன்வெல்த் அமைப்பின் தலைமை பதவியை, இலங்கையிடம் ஒப்படைத்தார். அடுத்த
காமன்வெல்த் மாநாடு, மொரீஷியஸ் நாட்டில் நடைபெற இருந்தது. ஆனால்,
இலங்கையின் மனித உரிமை மீறலை காரணம் காட்டி, இந்த மாநாட்டை
புறக்கணித்ததால், அடுத்த மாநாடு, ஐரோப்பிய நாடான மால்டாவில், 2015ல்,
நடைபெற உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக