பிரான்சினைத் தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் CNRJ எனும் இளையோர்களின் சிந்தனைவட்ட
மையத்தின் வருடாந்த கருத்தாடலில் இலங்கைத்தீவின் தமிழினப்படுகொலை விவகாரமும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது .
உளவியல் சிந்தனையாளர் பிரடெரிக் Fappani அவர்களின் வழிகாட்டலில்
இயங்கும் இந்த மையம் , பிரென்சு தேசத்தின் உள்ளக விவகாரம் மற்றும் சர்வதேச
விவகாரம் தொடர்பி , ல் இளையோர்களின் நிலைப்பாடுகள் குறித்து பிரான்சின்
அரச மற்றும் அரசியல் உயர்மட்டங்களுக்கான ஆலோசனைகளையும் கருத்துக்களையும்
வழங்கிவருகின்றது .
இச்சிந்தனை மையத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்
மகிந்தன் சிவசுப்ரமணியம் அவர்கள் தமிழ் இளையோர்களை
பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார் .
இந்நிலையில் இச்சிந்தனை மையடுத்தின் வருடாந்த கருத்தமர்வில் , சர்வதேச
விவகாரம் தொடர்பிலான இளையோர்களின் நிலைப்பாடுகள் எனும்
தொனிப்பொருளிலான கருத்துப்பகிர்வில் இலங்கைத்தீவின் தமிழினப்படுகொலை
விவகாரம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டது .
கடந்த மார்ச் மாதம் ஐ . நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில்
அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை மையமாக கொண்டு ,
அனைத்துலக விசாரணைக்கான அழுத்தங்களுக்கு மேற்கொண்ட பணிகள் குறித்து
எடுத்துரைக்கப்பட்டிருந்ததோடு , அனைத்துலக விசாரணைக்கான நிலையினை
எட்டுவதற்கான தொடர்சியான களப்பணிகள் குறித்தும் கருத்துபரிமாறப்பட்டது .
குறிப்பாக ஆபிரக்காவின் 14 நாடுகளில் கிளை பரப்பியுள்ள இச்சிந்தனை
மையத்தின் ( Brukina பாசோ ) புறுக்கினா பசோ நாட்டுப்பிரதிநிதி O.Paul
Koalaga அவர்கள் , ஆபிரிக்க யூனியனுடன் தமிழர் தரப்பின் தொடர்பாடலுக்கான
வழிமுறைகள் குறித்த பிரஸ்தாபித்திருந்தார் .
இதேவேளை பிரான்சுக்கான சுவிஸ் தூதரகத்தின் பிரதிநிதி Mireille Chaupuis அவர்களும் இக்கருத்தரங்கில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார் .
நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கி வருகின்ற இச்சிந்தனை மையம்
ஈழத் தமிழர்களுக்கான அரச பிரதிநிதித்துவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை
ஏற்றுக் கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக