சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

25 நவம்பர், 2013

யாழ் மத்திய பஸ் நிலையத்தில் மாவீரர்களை நினைவு கூரக்கோரி துண்டுப்பிரசுரம்

தாயக விடுதலைக்காக வித்தாகிப் போன மாவீரர்களை நினைவு கூரக் கோரி யாழ் , மத்திய பஸ் நிலையத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோக்கிக்கப்பட்டுள்ளன .
இத் துண்டு பிரசுரங்கள் நேற்றும் நேற்று முந்தினமும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அத்துண்டுப் பிரசுரங்களில் விடுதலையினை நோக்கமாக கொண்டு களமாடி உயிர் நீத்த எம் மாவீரர்கள் என்றென்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் . எம் முச்சுக் காற்று உள்ளவரை எம் மாவீரர்களை மறவோம் . என எழுதப்பட்டுள்ளதோடு மாவீரர்களின் கல்லறைகள் , கார்த்தீகைப் பூ ஆகியவற்றின் புகைப்படங்களும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக