சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

25 நவம்பர், 2013

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெருமைபோற்றுதல் சட்டவிரோதமானது - ஊடக மத்திய நிலையம்


ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புகழ்பாடுதல், பெருமைபோற்றுதல் சட்டவிரோதமானதென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு எவரும் நடந்துகொண்டால் சட்ட நடவடிக்கைக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் என அந்த நிலையம் எச்சரித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி மாவீரர் தினமாகும். இதனை அனுஸ்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பது சட்டவிரோதமான செயல் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக