விசா விதி முறைகளை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு
மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நோர்வே பிரஜையான ஈழத்து கவிஞர்
வி.ஜ.எஸ்.ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார்.
இத்தகவலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய திரைப்பட நடிகர் ஜெயபாலன் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா - மாங்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
தனது தாயின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற வேளை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் இலங்கை வந்த நோர்வே
பிரஜை ஜெயபாலன், விசா விதிமுறைகளை மீறி யாழ்ப்பாணத்தில் கூட்டங்களை
நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை வந்த ஜெயபாலன் ஊடகவியலாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பல தரப்பினரையும் சந்தித்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக