பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச
ரீதியான ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட வேண்டும்
என்றும் பயங்கரவாதத்தை நசுக்கும் முயற்சிகளை ஒவ்வொரு நாடும் முழு மனதுடன்
ஆதரிக்க வேண்டும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ
தெரிவித்தார்.
காலியில் இன்று ஆரம்பமாகிய
பிராந்திய கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயும் ‘கோல்
டயலொக் – 2013’ என்ற உயர் மட்ட மாநாடட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே
அவர் இவ்வாறு கூறினார்.
‘இந்து சமுத்திரத்தில் புதிதாக
உருவாகும் கடல்சார் முறைமைகள்’ என்ற தொனிப் பொருளில் இரண்டு நாட்கள்
நடைபெறவுள்ள இந்தமாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் தொடர்ந்தும்
உரையாற்றுகையில்-
சில நாடுகள் பயங்கரவாத்திற்கு எதிரான தமது போராட்டங்களை தேர்ந்தெடுத்த நிலைப்பாட்டில் மேற்கொள்கின்றன.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்
உலகளாவிய ரீதியில் வரையறுக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். பயங்கரவாதிகள்
தமது இலக்கை அடைய பொது மக்களை இலக்கு வைக்கின்றனர்.
பயங்கரவாத்தை நசுக்க நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை ஒவ்வொரு நாடும் முழு மனதுடன் ஆதரிக்க வேண்டும்.
பயங்கரவாத்தை தோற்கடிக்க நாடுகள் இடையிலான ஒரு உண்மையான ஒருங்கிணைந்த முறையான அமைப்பு தேவைப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக