சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

27 நவம்பர், 2013

இலங்கையின் மலையக முதலமைச்சர் வேட்பாளர்களாக முத்தையா முரளிதரன் மற்றும் விக்ரமபாகு போட்டி … ?

எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வைக்கும் நோக்கத்தில் ஜனாதிபதி தேடிய பிரபலமான நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒருவர் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த நட்சத்திரம் வேறு யாருமல்ல. இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த பிரித்தானிய பிரதமருக்கு துஷ்ரா பந்தை வீசி வீழ்த்த முயற்சித்து தனது பந்தில் தன்னையே வீழ்த்திக் கொண்ட முத்தையா முரளிதரனே அந்த நட்சத்திரமாகும்.
கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றதோடு அரசியல் மைதானத்திற்குள் காலடி எடுத்து வைத்த அர்ஜூன ரணதுங்க, சனத் ஜயசூரிய வரிசையில் முத்தையா முரளிதரனும்
அரசியல் மைதானத்திற்கு வருவதாக ஜனாதிபதிக்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முரளிதரனின் விருப்பம் கிடைத்துள்ள நிலையில் மகிழ்ச்சியடைந்துள்ள ஜனாதிபதி, நாட்டின் இரண்டாவது தமிழ் முதலமைச்சராக முத்தையா முரளிதரனுக்கு பட்டாபிஷேகம் செய்ய திட்டங்களை வகுத்து வருகிறார்.
தாம் தமிழ் மக்களையும் சரிநிகர் சமமாக நடத்துவதாக உலகத்திற்கு காட்ட ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
முத்தையா முரளிதரன் தென்னிந்திய பெண்ணொருவரையே மணந்திருப்பதால், தென்னிந்தியாவுடன் அவருக்கு இருக்கும் நெருங்கிய தொடர்புகளை ஜனாதிபதி தனக்கு சாதகமாக பயன்படுத்துவதை தடுக்க முடியாது.
எனினும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முத்தையா முரளிதரனுக்கு எதிரான எதிர்ப்பலை கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் முரளியின் அரசியல் வருகையின் பின்னணியில் வேறு ஒரு கதை இருப்பதாக பேசப்படுகிறது.
வானொலி அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படுவதை தடுக்க துமிந்த சில்வா அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது போல் முரளிதரனின் பின்னணியிலும் அப்படியான கதை இருப்பதாக தெரியவருகிறது.
அவரது சகோதரர் ஒருவர் சிறைச் செல்வதை தடுப்பதற்காவே முரளி அரசுடன் கைகோர்க்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு பெருந் தொகையான எத்தனேல் மதுசாரம் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முரளியின் சகோதரர்  ஒருவர் பெருந்தொகை பணத்தை அபராதமாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த வர்த்தகத்தை அவர் நீண்டகாலமாக செய்து வந்துள்ளதாகவும் இதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரிப் பணம் கிடைக்காமல் போயிருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விசாரணைகளை மூடிமறைக்க இருக்கும் ஒரே வழி அரசாங்கத்துடன் இணைவதுதான் என்று அறிந்திருக்கும் முரளிதரன், அரசியலில் இறங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்ரமபாகு போட்டி,…..
விரைவில் கலைக்கப்படவுள்ள மேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தீர்மானித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறுபான்மை கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளோம்.
மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, அசாத் சாலியின் தேசிய ஐக்கிய முன்னணி, சிறிதுங்க ஜயசூரியவின் ஐக்கிய சோசலிசக் கட்சி ஆகியவற்றுடனும் சில தொழிங்கங்களுடனும் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அரசியல் இலாபத்திற்காக முதலாளித்துக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிட போவதில்லை.
அரசாங்கத்திற்கு எதிரான கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் எதிர்ப்பு செயற்பாடுகளில் பங்கு கொண்டாலும் எந்த சந்தர்ப்பத்திலும் அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க போவதில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக