கொழும்பு: மூன்று நாட்டு கடற்படைகள் பங்கேற்கும் கூட்டு போர் பயிற்சிக்காக
இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த 2 போர்க்கப்பல்கள் இலங்கை
சென்றுள்ளன.இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்
தொடர் கதையாக நீடித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,
இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த்
மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது
என தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதன் காரணமாகவே கடந்த
மாதம், இந்திய கடற்படையின் தலைமை அதிகாரி டி.கே.ஜோஷி, இலங்கை சுற்றுப்பயணம்
மேற்கொண்டிருந்த போது, அந்நாட்டு கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க
இந்திய வீரர்களை அனுப்ப மறுத்து விட்டார். இந்நிலையில், இலங்கையில் இந்தியா,
மாலத்தீவு, இலங்கை ஆகிய 3 நாடுகளின் கடற்படைகள் கூட்டு போர் பயிற்சி நடக்க
உள்ளது.
இதற்கு இந்தியாவில் இருந்து 2 அதிநவீன கப்பல்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதிநவீன கருவிகளை கொண்ட இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல்களான விஷ்வாஸ், ராஜ்கமல் ஆகியவை இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தை நேற்று சென்றடைந்த போது இலங்கை கடற்படையினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். கடலோர பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் விஷ்வாஸ் கப்பல் 94 மீட்டர் நீளமும், 2400 டன் எடையும் கொண்டது.

இக்கப்பல் 10
அதிகாரிகள், 2 பயிற்சி அலுவலர்கள், 90 ஊழியர்களை உட்பட 102 பேரை
கொண்டதாகும். ராஜ்கமல் கப்பல் 50.38 மீட்டர் நீளமும் 356 டன் எடையும்
கொண்டதாகும். இதில், 5 அதிகாரிகள், ஒரு பயிற்சி அதிகாரி, 36 ஊழியர்கள் 42
பேர் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக